பொருட்பால்
தமிழ்க்கடலோடி திரவியம் தேடல்

மொழியின் வளமான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் அதனைச் சார்ந்த பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தமிழ்மொழி சார்ந்த பலதரப்பட்ட துறைகளின் பொருளாதாரப் பரப்பு குறித்துப் பேசுவதற்கு டிசிகாப் நிறுவனத்துடன் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளியின் தமிழ் மன்றம் இணைந்து  "பொருட்பால் - தமிழ்க்கடலோடி திரவியம் தேடல்" என்ற  கருத்தரங்கினை முன்னெடுக்கிறது.